மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 2019 மசோதாவைத் தாக்கல் செய்தார். மாநிலக் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கான உரிமையை பறிக்கும் விதத்தில் இந்தச்சட்டம் உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும், மாநிலங்களவையில் 108 - 13 என்ற வாக்குகளில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 2019, வாகன விதிமுறை மீறலுக்கு கடுமையான தண்டனைகளை நடைமுறைபடுத்தியுள்ளது. அனைத்து விதி மீறல்களுக்கும் அபராதத் தொகையும், சிறை தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் இதோ: