தாராளமயக் கொள்கை, தனியார்மயமாக்குதல் போன்றவற்றால் மக்கள் எந்த மாதிரியான பிரச்னையை சந்திப்பார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். கரோனா சூழலில் விவசாயிகள் முதல் பலரும் நகரம் நோக்கி நகர்கின்றனர். இந்தியா தனது பொருளாதார கொள்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கரோனா பரவலை தடுக்க நமது நாடு மற்றுமின்றி, உலக நாடுகள் பலவும் போராடி வருகின்றன. பண்டிகைகளின் பெயரால் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தால், மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரும் என கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த சூழலில் நமது நாட்டை பாதுகாப்பவர்கள் யாரென்றால்? அது விவசாயிகள்தான். மருத்துவத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் நம்மை காக்க பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.