ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான சர்வதேச நாளான கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் உலக நாடுகளை பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியின் கோர கோர பிடியிலிருந்து காக்க வேண்டும் என்பதே.
அந்த வகையில் இந்தாண்டு, “உணவு, ஊட்டல், நார்ப்பொருள்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி வறட்சி எதிர்ப்பு தினம் அமைகிறது. இதனுடன் பாலைவனமாக்கல், நில சீரழிவின் பொது அணுகுமுறைகளிலும் கவனம் செலுத்தப்படும்.
பாலைவனமாக்கல் என்றால் என்ன?
வறண்ட, அரை வறண்ட மற்றும் உலர்ந்த பகுதிகளில் நிலத்தின் சீரழிவுதான் பாலைவனமாக்கல். முதன்மையாக இது மனித நடவடிக்கைகளாலும் பின்னர் காலநிலை மாறுபாடுகளாலும் ஏற்படுகிறது.
இது தற்போதுள்ள பாலைவனங்களின் விரிவாக்கம் என்று அர்த்தமல்ல. ஆனால் இது வறண்ட நில சுற்றுச்சூழல் அமைப்புகள், காடுகள் அழிப்பு, மோசமான நீர்ப்பாசன நடைமுறைகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இதனால் நிலத்தின் உற்பத்தித் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சர்வதேச தினத்தின் வரலாறு
பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடும் உலக தினமாக ஜூலை 17ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை 1994ஆம் ஆண்டு அறிவித்தது.
இதன் நோக்கம் வறட்சி, பாலைவனமாக்கலை அனுபவிக்கும் பகுதிகளில் அதற்கு எதிராக போராடுவது.
மேலும், பாலைவனமயமாக்கலை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டை நடைமுறைப்படுத்தி மக்களிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும்.
நோக்கம்
பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி தினத்தின் நோக்கங்கள் வருமாறு:-
- பிரச்சினை குறித்த பொது விழிப்புணர்வை ஊக்குவித்தல்
- பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை திறம்பட சமாளிக்க முடியும். இதில் தீர்வுகள் சாத்தியம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அனைத்து மட்டங்களிலும் சமூக பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துதல்.
- கடுமையான வறட்சி அல்லது பாலைவனமாக்கலை அனுபவிக்கும் நாடுகளில் ஐ.நா. பொதுச்சபையின் திட்டங்களை செயல்படுத்துதல். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் மாநாட்டை செயல்படுத்துவதை வலுப்படுத்துதல்.
இந்தியாவில் பாலைவனமாக்கல்
2011-2013 காலகட்டத்தில் விண்வெளி பயன்பாட்டு மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு வரைபடத்தின் படி, 96.4 மில்லியன் ஹெக்டேர்கள் நிலச்சீரழிவுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 29.32 விழுக்காடு பாலைவனமாக்கல் அல்லது நில சீரழிவு செயல்முறைக்கு உள்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 6.35 விழுக்காடு நிலம் பாலைவனமாக்கல் மற்றும் சீரழிவுக்கு ஆளாகியுள்ளது.
இந்தியாவின் முயற்சிகள்
2030 ஆம் ஆண்டில் நில சீரழிவு நடுநிலை நிலையை அடைவதற்கு இந்தியாவும் உறுதியளித்துள்ளது. 2019 செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற்ற பாலைவனத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்சிகளின் மாநாட்டின் 14ஆவது அமர்வில், சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்கப்படும் என்று தனது லட்சியத்தை இந்தியா வெளிப்படுத்தியது.
அதன்படி, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தேசிய காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம் பிரிவு தேசிய காடு வளர்ப்பு திட்டத்தை மூன்று ஆயிரத்து 874 கோடிக்கு செயல்படுத்தி வருகிறது.
மேலும் பசுமை இந்தியா திட்டம், காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின், நகர் வான் யோஜனா போன்றவற்றின் கீழ் திரட்டப்பட்ட நிதி போன்ற பல்வேறு திட்டங்களும் காடுகளின் நிலப்பரப்பை சீரமைக்கவும், மீட்டமைப்பதற்கும் உதவுகின்றன.
முதன்மையாக வேளாண் வனவியல் விரிவாக்கம், தரிசு நிலங்களின் உகந்த பயன்பாடு மற்றும் காலியாக உள்ள நிலங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் வனப்பகுதிகளை அதிகரிக்க காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களை வளர்க்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, மண் சுகாதார அட்டை திட்டம், மண் சுகாதார மேலாண்மை திட்டம், பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜ்னா, ஒரு துளி அதிக பயிர் போன்ற சொட்டு நீர் திட்டங்களும் நில சீரழிவைக் குறைக்க உதவுகின்றன.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய பேரிடர் வறட்சி நிதி (2018-19)
மாநிலம் | தொகை (கோடிகளில்) |
ஆந்திரா | 900.4 |
கர்நாடகா | 949.49 + 1,029.39 |
மகாராஷ்டிரா | 4,714.28 |
ராஜஸ்தான் | 1,206.62 |
குஜராத் | 127.6 |
ஜார்க்கண்ட் | 272.42 |
மொத்தம் | 9,200.2 |
தற்போதைய வறட்சி நிலை
நாட்டின் தற்போதைய வறட்சி நிலை குறித்த புள்ளி விவர தகவல்கள் ஜூன் 10ஆம் தேதி வெளியானது.
அதில் நாடு முழுவதும் சுமார் 6.88 விழுக்காடு பரப்பளவு வறட்சியின் கீழ் உள்ளதும் 1.83 விழுக்காடு பரப்பளவு அதீத வறட்சி முதல் விதிவிலக்கான வறட்சியின் கீழ் உள்ளதும் தெரியவருகிறது.
அது குறித்த புள்ளிவிவர தகவல்களை பார்க்கலாம்.
வறட்சியில்லை | 92.28 |
---|---|
அசாதாரண வறட்சி | 6.88 |
மிதமான வறட்சி | 4.18 |
கடுமையான வறட்சி | 2.30 |
அதீத வறட்சி | 1.83 |
விதிவிலக்கு வறட்சி | 1.38 |
குடி நீர் சேமிப்போம், குடி காப்போம்.!
இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பாளர்களை மரணத்திலிருந்து காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள்!