வரும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கலை நிகழ்ச்சிகளுடன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரி சுந்தரேசன் பிரார்த்தனை பாடலும், தீபாவளி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையான பாடலும் பாடினார். தொடர்ந்து கிரண்பேடி பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம்- பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து