புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மருத்துவப் படிப்பிற்கான உள் ஒதுக்கீடாக 10 விழுக்காடு வழங்க அரசு அறிவித்திருந்தது. இதற்குத் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தராமல் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் திமுக மாணவரணி, அனைந்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அண்ணா சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 10 விழுக்காடு, தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பியும் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.