ETV Bharat / bharat

சட்டமியற்றுபவர்களே விழுமியங்களை மீறுகிறார்கள் - தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அவையாகக் கருதப்படும் மாநிலங்களவையில் அந்தந்த மாநிலங்களின் கருத்துகளை கூற வாய்ப்பளிக்காதது, மற்றும் சபையின் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் மீறிய எதிர்க்கட்சிகள் ஆகிய இரண்டும் துரதிர்ஷ்டவசமானது.

Rajya Sabha
Rajya Sabha
author img

By

Published : Sep 25, 2020, 2:03 AM IST

கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலைக்கு தூண்டப்பட்டகிட்டத்தட்ட நான்கு லட்சம் விவசாயிகளின் மரணங்கள் நாட்டின் வேளாண் துறையில் அதிகரித்து வரும் நெருக்கடியை பறைசாற்றுகின்றன. விவசாய பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதற்கும் விவசாயிகளின் நலனுக்காக ஒரு பாதுகாப்பு வழங்குவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய முக்கிய மசோதாக்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மேல் சபையிலும் புயலை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்குரிய மசோதாக்கள் லோக்சபாவில் எளிதில் நிறைவேற்றப்பட்டாலும், சிரோமணி அகாலிதள அமைச்சர் பதவி விலகியதன் மூலம் ஆளும் கூட்டணி சர்ச்சையில் சிக்கியது. பிஜு ஜனதா தளம், அதிமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, திரிணாமுல் மற்றும் அகாலிதளம் போன்ற கட்சிகள் NDAவை எதிர்த்தது மேலவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மசோதா விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறிய கட்சிகள், இந்த மசோதாக்களை ஒரு விரிவான மறுஆய்வுக்காக தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது முறையான வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கிடையில், உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத செயல்கள் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. அந்தக் குழப்பத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்ற அறிவிப்பு, அடிப்படையில் சந்தேகங்களை எழுப்புகிறது.

நாட்டின் மக்கள்தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைப் பெற்று, சபையில் அவற்றைப் பற்றி விவாதித்து, குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரிசெய்து முறையான வாக்களிப்பின் மூலம் திருத்தப்பட்ட, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மசோதாக்களாக நிறைவேற்ற ஏன் NDA முன்வரவில்லை?

மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அவையாகக் கருதப்படும் மாநிலங்களவையில் அந்தந்த மாநிலங்களின் கருத்துகளை கூற வாய்ப்பளிக்காதது, மற்றும் சபையின் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் மீறிய எதிர்க்கட்சிகள் ஆகிய இரண்டும் துரதிர்ஷ்டவசமானது. எட்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கு வழிவகுத்த அந்த நாள், மேல் சபையின் வரலாற்றில் இருண்ட நாளாகவே இருக்கும்.

நாடாளுமன்றம் என்பது ஒரு சட்ட அமைப்பு மட்டுமல்ல; இது விவாதத்திற்கான ஒரு மன்றமாகும். இது தொடர்பாக நாம் அனைவரும் மதிப்புமிக்க சேவைகளை வழங்க வேண்டும் என்று டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மே 1952இல் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தில் வலியுறுத்தினார். இந்திய நாடாளுமன்றம் என்பது இரு அவைகளும் சேர்ந்த அமைப்பாக இருக்க பண்டித நேரு முடிவு செய்த போது, அரசியலமைப்புச் சபையில் முதியோர் சபையின் அவசியம் குறித்து அப்போது ஒரு பெரிய விவாதம் நடைபெற்றது.

அதிகாரத்தில் இருக்கும் கட்சி, சில சமயங்களில் அரசியல் காரணங்களுக்காக மக்களவையில் சட்டங்களை உருவாக்கக்கூடும் என்றும் அந்த சட்டங்களை உன்னிப்பாக ஆராய்வதற்கு மற்றொரு சபையின் தேவை உள்ளது என்றும் உரத்த மற்றும் தெளிவான வாதம் இருந்தது..

திறமையான மற்றும் அறிவாற்றல் மிகுந்த உறுப்பினர்களைக் கொண்ட இருசபை அமைப்பு முறை சட்ட முன்மொழிவுகளை ஆழமாக மறுஆய்வு செய்வதற்கு உகந்ததாகவும், ஒருங்கிணைந்த அறிவாற்றல் நாட்டிற்கு நிறைய நன்மைகளைச் செய்யும் என்ற நம்பிக்கையின் காரணமாக மாநிலங்களவை பிறந்தது. கூட்டத்தொடரின் போது மேல் சபை தன்னை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை, மேல் சபை என்பது சூடான விவாதங்களை குளிர்விக்கும் ஒரு தட்டு போன்றது என்று புகழ்பெற்ற அதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டனின் வார்த்தைகள் விளக்குகிறது.

சுயகட்டுப்பாடு மற்றும் சரியான சிந்தனைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மாநிலங்களவை, ஆத்திரம் மற்றும் ஒழுங்கற்ற நடத்தைக்கான ஒரு இடமாக மாறி இருப்பது விவேக சிந்தனையாளர்களுக்கு ஒரு கவலையாக உள்ளது. நாட்டின் உயர்ந்த சட்ட அமைப்புகள், உன்னதமான நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும்

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது ஒழுங்கற்ற மற்றும் ஆக்கிரோஷமான நடத்தை மூலம் முழு நாட்டிற்கும் என்ன செய்தியை கூற வருகின்றன? நன்மை செய்வது மட்டும் போதாது, ஆனால் நல்லதைச் செய்வது கூட முக்கியம் என்று மகாத்மா காந்தி கூறினார். பல விவசாயிகள் சங்கங்களும் மாநில அரசுகளும் இந்த மசோதாக்கள் குறித்து சந்தேகம் தெரிவித்தாலும், விரிவான விவாதங்களும் முறையான மதிப்பாய்வும் இல்லாமல் மத்திய அரசு அதனை செயல்படுத்துவது நியாயமற்றது. நாடாளுமன்றம் என்பது சட்டமியற்றும் இடம் மட்டுமல்ல, முழுமையான விவாதங்களுக்கான ஒரு மன்றம் என்ற அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லையெனில், இந்திய ஜனநாயகம் எதை நோக்கி செல்கிறது என்ற விரக்தி எழுகிறது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.