ETV Bharat / bharat

'சீனப் பொருள்கள் புறக்கணிப்பால் இந்திய பொம்மைகளின் தேவை அதிகரிப்பு’ - இந்திய தயாரிப்புகளை விரும்பும் மக்கள்

ராஜ்கோட்: எல்லையில் ஏற்பட்ட மோதலையடுத்து, சீனப் பொருள்கள் புறக்கணிப்பால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்குத் தற்போது தேவை அதிகரித்துள்ளதாக, அதிதி டாய்ஸின் இணை இயக்குனர் அரவிந்த் ஜலா தெரிவித்துள்ளார்.

Demand for 'made in India' toys increase in Gujarat's Rajkot amid Chinese products boycott
author img

By

Published : Jul 17, 2020, 11:38 PM IST

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக, அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சீனாவுக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் போராட்டங்களும், சீனப் பொருள்களை உடைத்தும்‌ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சமயத்தில் மக்கள் 'மேட் இன் இந்தியா' பொருள்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், மேட் இன் இந்தியா பொம்மைகளுக்குத் தேவை அதிகரித்துள்ளதாக, அதிதி டாய்ஸின் இணை இயக்குனர் அரவிந்த் ஜலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கிட்டத்தட்ட 80 முதல் 90 விழுக்காடு பொம்மைகள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, மேட் இன் இந்தியா பக்கம் மக்கள் திரும்பியுள்ளதால், உள்நாட்டு சந்தை வளர்ச்சியடைவது மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாகும். அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 100க்கும் மேற்பட்டவையைத் தயாரிப்போம் என நம்பிகிறோம்.

இந்திய சந்தையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு வருடத்திற்குள் நிச்சயம் 200 தயாரிப்புகளை தயாரித்துவிடுவோம். தற்போது, நாட்டில் பொம்மை தொழில்முனைவோர் குறைவாகத்தான் உள்ளனர்.

போட்டி குறைவாக உள்ளதால் மற்ற தொழில்களுடன் ஒப்பிடுகையில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியா- சீனா எல்லை மோதல் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருள்களுக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.