வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 191 பேர் காயமுற்றுள்ளனர்.
இவர்களில் 56 பேர் காவலர்கள். வன்முறை சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு ஜிடிபி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சர் சத்யந்தர் ஜெயின் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜாமியா பல்கலை. தாக்குதல்: காவலர்கள்-மாணவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு