ETV Bharat / bharat

டெல்லி கலவரம் : ஸ்வீட் கடை ஊழியரைக் கொன்றவர் கைது - டெல்லி கலவரம் அண்மை செய்திகள்

டெல்லி: டெல்லி கலவரத்தில் ஸ்வீட் கடை ஊழியர் ஒருவரைக் கொலை செய்த நபரைக் காவல் துறையினர் செய்துள்ளனர்.

delhi violence, டெல்லி வன்முறை
delhi violence
author img

By

Published : Mar 7, 2020, 5:23 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த போராட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை கலவரமாக மாறியது. தொடர்ந்து இரண்டு நாள்கள் நடந்த இந்தக் கலவரத்தில் காவல் துறை அலுவலர்கள் இருவர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

நாட்டையே பதைபதைக்க வைத்த இந்தக் கலவரத்துக்கு காரணமானவர்களைக் கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, டெல்லி ஷாதரா மாவட்டத்தில் உள்ள பிரம்மபூரி பகுதியில் கடந்த மாதம் (பிப்ரவரி) 26ஆம் தேதி, சிதைந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தில்பார் சிங் நேஜி என்பவருடைய உடல் என்றும், அவர் பிரம்மபூரி பகுதியில் ஸ்வீட் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த காவல் துறையினர், அக்கொலையில் தொடர்புடைய ஷாநவாஸ் (27) என்பவரைத் தற்போது கைது செய்துள்ளனர். தொடர்ந்து, மற்ற குற்றவாளிகளையும் தேடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கொரோனாவைத் தடுக்க ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - ட்ரம்ப் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.