ETV Bharat / bharat

அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!

டெல்லி: போதைப்பொருள் வைத்திருந்ததற்காக வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவரை சுங்கத் துறை அலுவலர்கள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

Arrest
Arrest
author img

By

Published : Dec 20, 2019, 4:32 PM IST

போதைப்பொருள் கடத்தல் நாடு முழுவதும் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த ஒருவரை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, போதைப்பொருளை காப்ஸ்யூலில் அடைத்து அவர் உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடலிலிருந்து போதைப்பொருள் நிரப்பப்பட்ட 80 காப்ஸ்யூல்களை மருத்துவர்கள் எடுத்தனர். அதன் எடை 880 கிராம் எனவும் விலை ரூபாய் 88 லட்சம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Intro:Body:

Delhi: Venezuelan national arrested with drugs at IGI airport

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.