ETV Bharat / bharat

'டெல்லி கலவரம் திட்டமிட்ட சதி...!' - மனிஷ் சிசோடியா டெல்லி கலவரம்

அகர்தலா: டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற கலவரம் ஒரு திட்டமிட்ட சதி என திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Manik
Manik
author img

By

Published : Mar 11, 2020, 3:07 PM IST

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் பணி திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. அதை திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான மாணிக் சர்க்கார் தலைமைதாங்கி நடத்திவைத்தார்.

நிகழ்வில் பங்கேற்று பேசிய மாணிக் சர்க்கார், டெல்லியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு அரங்கேறிய சதி எனவும், அங்கு சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வு திட்டமிட்டு தூண்டப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்தக் கலவரத்தை முன்னின்று நடத்த வெளிமாநிலங்களிலிருந்து குண்டர்கள் அழைத்துவரப்பட்டு பொருள்கள் சூறையாடப்பட்டன எனவும் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்துவாடுபவர்களுக்கு உதவ கம்யூனிஸ்ட் தொண்டர்கள் முன்வர வேண்டும் என சர்க்கார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

டெல்லி கலவரத்தின்போது 79 வீடுகளும், 327 கடைகளும் சூறையாடப்பட்டன என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்விதமாக டெல்லி அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.