நாட்டின் தலைநகாரன டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில், வாக்குபதிவு 67.08 விழுக்காடு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. தேர்தல் பாதுகாப்புக்காக 40 ஆயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில், ஒரு கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 382 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என டெல்லி தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார். வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக சீல் வைக்கப்பட்டன. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை தமிழர்களின் சமநீதிக்கு அரசு வழிவகை செய்யுமென நம்புகிறேன்- பிரதமர் மோடி!