பயங்கரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்தவுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து டெல்லி சிறப்புப் படை அம்மாநிலத்தில் உள்ள 10 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. ஆனால், இந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்ததால் சோதனை நடத்தியதாக சிறப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் வெளியானதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறப்பு படை இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்துவருகிறது.