கரோனா வைரஸ் நோயால் பல மாநிலங்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, நோய் தாக்கத்தின் விகிதம் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலை பிரபல சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் குழு வெளியிட்டுள்ளது. பத்து லட்சம் பேரில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் டெல்லியில் அதிகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் ராதிகா ராவ் கூறுகையில், "மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில இடங்களில் தாக்கத்தை பொறுத்து விதிகள் தளர்த்தப்படவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கோவிட் - 19 தொற்றுக்குப் பிறகான உலகம் - இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் கருத்து