டெல்லி காவல் துறையின் போக்குவரத்து பிரிவு உதவி காவல் ஆணையர் சங்கெட் கெளசில். இவர் நேற்று இரவு 10 மணியளவில் ராஜோக்ரி மேம்பாலம் அருகே போக்குவரத்தை நிர்வகித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு மினி லாரி வேகமாக மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், " விபத்து ஏற்படுத்திய மினி லாரி, ஓட்டுநர் குறித்த விவரங்கள் சரியாக தெரியவில்லை.
விபத்து நடந்த பின்னர் ஓட்டுநர் மினி லாரியுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். ஓட்டுநரை பிடிக்க காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இது வெறும் விபத்துதானா அல்லது ஏதேனும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு: இளைஞர் கைது!