நாட்டின் தலைநகர் டெல்லியில் சில நாட்களாக காற்றின் மாசுபாடு அதிகரித்து வருவதால், மக்கள் திணறிவரும் நிலையில், இன்று காற்று மாசுபாடு குறியீடு (Air Quality Index - AQI) அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு வீரியம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கண் எரிச்சலாலும், மூச்சுத் திணறலாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று காலை காற்று மாசுபாட்டு குறியீட்டின் படி, 625 என்ற நிலையில் இருந்ததைத் தொடர்ந்து 12 மணியளவில் இதனளவு 1000-ஐ தாண்டியுள்ளது.
தீபாவளியில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைவு - கெஜ்ரிவால்
காற்று மாசுபாடு குறியீட்டின் அளவு 0-50க்கு இடையிலிருந்தால் "நல்லது", 51-100க்கு இடையில் இருந்தால் "திருப்திகரமானது", 101-200க்கு இடைப்பட்டு இருந்தால் "மிதமானது", 301-400க்கு இடையில் இருந்தால் "மிகவும் மோசம்" 401-500க்கு இடைப்பட்டு இருந்தால் "படு மோசமான சூழல்" என்று கணக்கிடப்படும். மேலும், 500க்கு மேல் இருந்தால் "படு மோசம்/ அவசரநிலை" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நம்ம டெல்லிக்கு என்ன தான் ஆச்சு...? - சசிதரூர் ட்விட்
திர்பூரில், காற்று மாசுபாட்டு குறியீட்டின் அளவு 509 ஆகவும், டெல்லி பல்கலைக்கழக பகுதியில் இது 591 ஆகவும், டெல்லியின் புகழ்பெற்ற சாந்தினி சவுக் பகுதியில் 432 ஆகவும், லோதி சாலையில் 537 ஆகவும் பதிவாகியுள்ளது.
தலைநகரைத் தவிர, உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், நொய்டா ஆகிய பகுதிகளிலும் காற்று மாசுபாட்டு குறியீட்டின் அளவு 600-ஐ தாண்டியுள்ளது. மேலும், இது குறித்து ட்விட்டர் வாசி ஒருவர் பதிவில், 'காலை வணக்கம் செர்னோபில்' என்று குறிப்பிட்டு, டெல்லியின் காற்று மாசுபாடு குறித்தான அவசரநிலையை இணைய வாசிகளுக்கு உணர்த்தியுள்ளார்.
-
Good morning from Chernobyl. 😷 pic.twitter.com/TY4gE5U229
— Trendulkar (@Trendulkar) November 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good morning from Chernobyl. 😷 pic.twitter.com/TY4gE5U229
— Trendulkar (@Trendulkar) November 3, 2019Good morning from Chernobyl. 😷 pic.twitter.com/TY4gE5U229
— Trendulkar (@Trendulkar) November 3, 2019