இந்தியா வந்துள்ள நியூசிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் சைமன் பிரிட்ஜஸை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, “நியூசிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் சைமன் பிரிட்ஜை வரவேற்பதில் மிகழ்ச்சியடைகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியம், இருதரப்பு உறவை வலுப்படுத்தல் தொடர்பாக நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம்" என ஜெய்சங்கர் பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம், பாங்காக்கில் நடந்த தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மாநாட்டில் நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், இந்தியா - நியூசிலாந்து இடையேயான பொருளாதார, அரசியல் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தியாவுடன் நீண்ட காலம் நட்பு பாராட்டிவரும் நியூசிலாந்து, இந்தியாவைப் போல் பயங்கர ஆயுதங்கள் கைவிடுதல், உலக அமைதி, வளர்ந்த-வளரும் நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.