இது குறித்து நேற்று வெளியான டெல்லி அரசின் அறிக்கையில், "தனியார் நர்சிங் ஹோம்களை கோவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்றும் உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோயாளிகளை மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவில் கண் பரிசோதனை மையங்கள், இஎன்டி மையங்கள், டயாலிசிஸ் மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஐவிஎஃப் மையங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் நேற்று ஒரேநாளில் இரண்டு ஆயிரத்து 224 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 182ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 15 ஆயிரத்து 823 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 327 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கோவிட்-19ஆல் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஏஜிஆர் வரையறையில் அவசர மாற்றம் தேவை!