கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள் என முன்னணியில் நின்று போராடிவருகின்றனர். ஆனால் அவர்களுக்கும் கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி சார்பில் செய்தியாளர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை ஆசாத் மைதானத்தில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. நேற்று வெளியான மருத்துவ சோதனை முடிவுகளில் 53 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள அனைத்து செய்தியாளர்களுக்கும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பெரியளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
-
Sure. We will do that https://t.co/ehcY5OMiEP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sure. We will do that https://t.co/ehcY5OMiEP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 21, 2020Sure. We will do that https://t.co/ehcY5OMiEP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 21, 2020
அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், நிச்சயமாக அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்படும் என்று பதிலளித்துள்ளார். இருப்பினும் இது குறித்து வேறு எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: செய்தியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுரை