ETV Bharat / bharat

கரோனா - அரசு மருத்துவமனைக்கு சீல்

டெல்லி : மருத்துவ ஊழியர்கள் 14 பேருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து வடக்கு டெல்லியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் நினைவு அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Delhi govt hospital sealed after 14 staffers test COVID positive
மருத்துவ ஊழியர்கள் 14 பேருக்கு கோவிட்-19 உறுதி - அரசு மருத்துவமனை சீல் வைப்பு!
author img

By

Published : Apr 24, 2020, 9:58 AM IST

உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, டெல்லியில் 2,376 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 89 பகுதிகள் கோவிட்-19 பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக நீட்டித்துள்ளது. தனி நபர் இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடைவிதித்துள்ளது.

இருப்பினும் நாளுக்குநாள் அதிகரிக்கும் வைரஸின் தாக்கம் காரணமாக தொற்றுநோய் பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சிவப்பு குறியீடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு டெல்லியில் கோவிட்-19 பாதிக்கப்பட்ட 60 பேருக்கு பாபு ஜெகஜீவன் ராம் நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த பாபு ஜெகஜீவன் ராம் நினைவு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 14 மருத்துவ ஊழியர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று நோய் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Delhi govt hospital sealed after 14 staffers test COVID positive
மருத்துவ ஊழியர்கள் 14 பேருக்கு கோவிட்-19 உறுதி - அரசு மருத்துவமனை சீல் வைப்பு!

இதையும் படிங்க :
டெல்லி மருத்துவர்களைத் தாக்கிய நோயாளிகள்
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.