ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி வீடுகளைத் தேடி வரும் - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்! - டெல்லியில் ஐசியு படுக்கை வசதிகள்

கரோனா தடுப்பூசி கிடைக்கப்பெற்ற மூன்று முதல் நான்கே வாரங்களில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்
author img

By

Published : Nov 28, 2020, 11:59 PM IST

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையிலும் டெல்லியில் அதன் தாக்கம் அதிகரித்தது. தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், "கரோனா தடுப்பூசி அனைவருக்கும் வீடு தேடி வரும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தடுப்பூசி கிடைத்த மூன்று முதல் நான்கே வாரங்களில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று மட்டும், புதிதாக 5,482 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு 8.51ஆக குறைந்துள்ளது. நவம்பர் 7ஆம் தேதி, அது 15 விழுக்காடாக இருந்தது. துயர் நீக்கும் விதமாக அது உள்ளது.

மருத்துவமனைகளில் 50 விழுக்காடு படுக்கை காலியாக உள்ளன. மேலும், 1,200 ஐசியு படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நேற்று, ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை இருந்தது. தற்போது அது தீர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.