டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்கு மாறிய பிரபலங்கள் உள்ளனர். இவர்களில் சிலருக்கு நல்வாய்ப்பாக போட்டியிட வாய்ப்பு கிட்டியது. எனினும் பலர் எதிர்ப்பாளராகவே அடங்கி போனார்கள்.
அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார். அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சியோடு தொடக்கதிலிந்தே பயணித்தவர் ஆவார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு பரீட்சயமானவர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உடன் பயணித்தவர். இவர் கடந்தாண்டு காங்கிரஸில் இணைந்தார்.
பிரஹலாத் சிங் சாவ்னி
நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவர் கடந்தாண்டு அக்டோபரில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இவர் சாந்தினி சவுக் தொகுதியில் அல்கா லாம்பாவுக்கு எதிராக போட்டியிடுகிறார். பாஜகவின் வேட்பாளர் சுமன் குமார் குப்தாவும் களம் காண்கிறார். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்த மூவருக்கும் இடையே சாந்தினி சவுக் தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஆதர்ஷ் சாஸ்திரி
இவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் சார்பாக களம் காண்கிறார். தேர்தலில் போட்டியிட சீட்டுக்கு ரூ.10 கோடி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இவர் ஆம் ஆத்மியின் வினய் மிஸ்ராவை எதிர்த்து களம் காண்கிறார். வினய் மிஸ்ரா கடந்தாண்டு இதே துவாரகை தொகுதியில் வெற்றிவாகை சூடியவராவார்.
அனில் பாஜ்பாய்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அனில் பாஜ்பாய் பாஜக சார்பாக கிழக்கு டெல்லியில் களம் காண்கிறார். இரண்டு முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான சுரேந்தர் பால் சிங் இம்முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதேபோல் பாஜகவிலிருந்து விலகிய பூனம் ஆஸாத் இம்முறை காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். இவர் கீர்த்தி ஆஸாத்தின் மனைவி ஆவார்.
இதையும் படிங்க : உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும்: ராஜ்நாத் சிங்