70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பதிவான 62.59 சதவீத வாக்குகளில் நோட்டா 0.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் (2015ஆம் ஆண்டு) காட்டிலும் 0.1 சதவீதம் அதிகமாகும். இந்தத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. வாக்கு பகிர்வு ஆம் ஆத்மிக்கு 53.57 சதவீதமாகவும் பாஜகவுக்கு 38.51 சதவீதமாகவும் உள்ளது. காங்கிரஸை 4 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது.