குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மஸ்ஸித் பல்கலைக்கழக மாணவர்கள் டிசம்பர் 15ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கிடையே ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் காவல் துறையின் வாகனங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்நிலையில் காவலர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கு நீதிபதி ரஜத் கோயல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 16ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: என்.ஆர்.சி. சித்திரம் வரைந்து ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு!