காங்கிரஸ் மூத்தத் தலைவரும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
2014ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சசி தரூரின் மனைவியான சுனந்த புஷ்கர் சொகுசு விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்தில் சசி தரூருக்குத் தொடர்பு இருப்பதாக்கூறி டெல்லி காவல் துறை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் டெல்லி நீதிமன்றத்திடம் நிபந்தனை பிணை பெற்ற சசி தரூர், வழக்கு விசாரணை முடியும்வரை நீதிமன்ற அனுமதியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சசி தரூர் தரப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. கோரிக்கையை பரீசிலித்த டெல்லி ரோஸ் அவன்யூ நிதிமன்றம், சசி தரூர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதித்துள்ளது.
வரும் பிப்ரவரி இறுதியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்போவதாக சசி தரூர் தரப்பு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஃபிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கும் இவர் பயணம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தனியார் விடுதியை அடையாளம் காட்டிய ஜெயக்குமார்