கரோனா பாதிப்பு மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 4ஆவது இடத்தில் உள்ள நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார்.
இது குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், “சில பொருளாதார நடவடிக்கைகளுக்கு இன்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மக்கள் கரோனாவோடு வாழ பழக வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும்போது மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டும். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். நாம் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், கடவுள் நம்மைப் பாதுகாப்பார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொருந்தாது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித பணிகளை மேற்கொள்ளவோ, தனியார் நிறுவனங்கள் இயங்கவோ அனுமதி இல்லை.
டெல்லியில் 20 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டிக்கிறது. அவர்கள் பரிசோதனைக்கு பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிங்க: இந்தியர்களின் விருப்பமான எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு பிறந்த நாள்!