ETV Bharat / bharat

இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முன்வாருங்கள் : டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

author img

By

Published : Jun 14, 2020, 2:20 PM IST

டெல்லி : மாநில அரசின் இலவச டெலி மெடிசன் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டு மக்களுக்கு உதவு முன்வருமாறு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

kejriwal
kejriwal

கரோனா வைரஸ் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில், அங்குள்ள மக்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற அம்மாநில அரசு டெலிமெடிசன் எனும் இலவச மருத்துவ சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சேவையில் மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை இணைத்துக் கொண்டு மக்களுக்கு உதவும்படி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "கோவிட்-19 பெருந்தொற்றை அனைத்து தரப்பினரும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில், பல மருத்துவர்கள் தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். நீங்கள் மருத்துவராக இருந்து மக்களுக்கு இலவசமாக உதவ நினைத்தால் '08047192219' என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கும் டெல்லி முதலமைச்சர்

டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்து 958 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (13-06-2020) மட்டும் இரண்டு ஆயிரத்து 136 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் ஆயிரத்து 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • I appeal to all doctors to volunteer for Delhi government's Corona Telemedicine Helpline. Give a missed call now to 08047192219 to register. The people of Delhi need your support in this difficult hour. #DelhiFightsCorona pic.twitter.com/7C7q0TstOB

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மகாராஷ்டிராவை அடுத்து இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜியோ நிறுவனத்தில் பிரபல அமெரிக்க நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.