உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தில் அமையவுள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வின் அழைப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைமை விருந்தினர்களின் பெயர்கள், அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டபோது, “நான் இன்னும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்படவில்லை” என்றார். கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட ராமர் அனைத்து குடிமக்களையும் டெல்லி மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோயிலின் பிரதான கட்டடக் கலைஞர் நிகில் சோம்புரா, அயோத்தியின் பிரமாண்டமான ராமர் கோயிலின் உயரம் 161 அடியாக இருக்கும் என்றும், இது 1988ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட முந்தைய வடிவமைப்பிலிருந்து 20 அடி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கதியார் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைத்திருப்பதாக கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிட மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் உறுப்பினர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்தார். தற்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் விசாரணையை எதிர்கொண்டுவருகின்றனர்.