ETV Bharat / bharat

‘துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என முழங்கிய அனுராக் தாகூர் - தேர்தல் ஆணையம் விசாரணை - துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் அனுராக் தாகூர்

டெல்லி: துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று அனுராக் தாகூர் முழங்கியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனுராக் தாகூர்
அனுராக் தாகூர்
author img

By

Published : Jan 28, 2020, 1:28 PM IST

பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான அனுராக் தாகூர், ”துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” எனும் பொருள்படும்படியான இந்தி முழக்கத்தை முன்வைத்தார்.

பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் மனிஷ் சௌத்ரி என்பவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிராக இந்த முழக்கத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

அனுராக் தாகூரின் இந்த முழக்கம் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி அனுராக் தாகூரின் இந்த செயல் குறித்து டெல்லியின் அப்பகுதி தேர்தல் அலுவலரிடமிருந்து இதுகுறித்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுதொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை பெறப்படவில்லை எனவும் டெல்லி தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஷஹீன் பாக் எனுமிடத்தில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் அச்சட்டத்திற்கு எதிராகவும், நாட்டிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதையும் தொடர்ந்து, அனுராக் தாகூர் ”துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” எனும் பொருள்படும்படியான முழக்கத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்தார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ - மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

Intro:नई दिल्ली:
रिठाला में एक जनसभा के दौरान केंद्रीय वित्त राज्य मंत्री अनुराग ठाकुर के "देश के गद्दारों..." नारे पर चुनाव आयोग ने संज्ञान लिया है. दिल्ली के मुख्य निर्वाचन अधिकारी ने इसे लेकर डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर से रिपोर्ट मांगी है. मामले में कांग्रेस पार्टी समेत वरिष्ठ वकील प्रशांत भूषण ने भी आपत्ति जताई थी. Body:दिल्ली के मुख्य निर्वाचन अधिकारी रणबीर सिंह ने कहा कि उन्होंने पूरे मामले की रिपोर्ट मांगी है. हालांकि, अभी तक उन्हें कोई शिकायत प्राप्त नहीं हुई है. डिस्टिक इलेक्शन ऑफिसर भी रिटर्निंग ऑफिसर से मामले की जानकारी लेंगे. Conclusion:बता दें कि अनुराग ठाकुर ने आयोजित रैली को संबोधित करते हुए कथित रूप से नारा लगाया कि- 'देश के गद्दारों को.. ", जिसपर रैली में शामिल लोगों ने बोला कि 'गोली मारो .... को.' यहां ठाकुर रिठाला विधानसभा में बीजेपी प्रत्याशी मनीष चौधरी के समर्थन में गृहमंत्री अमित शाह की रैली में शामिल हुए थे.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.