தலைநகர் டெல்லியின் துவாரகா பகுதியில் நேற்று பட்டப்பகலில் ஆள்கள் நடமாட்டம் உள்ள சாலை நடுவே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தலைக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர், கார் ஒன்றில் பயணித்த ரியல் எஸ்டேட் வியாபாரியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற ரியல் எஸ்டேட் வியாபாரி காரைவிட்டு வௌியேறி ஓட முயற்சித்தபோது, அருகில் நின்ற கார் மீது ஏறி அடையாளம் தெரியாத நபர் அவரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான ரியல் எஸ்டேட் வியாபாரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட பொதுமக்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்ட சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சியைக் கொண்டு குற்றவாளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்தக் கொலை இரு தரப்பினருக்கு இடையேயான சொத்துப் பிரச்னை காரணமாக நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்., அதிபர் அலுவலகம் எதிரே குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!