ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவு: குறைந்த காற்று மாசு

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் டெல்லி உட்பட பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளது.

author img

By

Published : Mar 30, 2020, 11:53 AM IST

Updated : Mar 30, 2020, 2:13 PM IST

டெல்லி காற்று மாசு காற்று மாசு டெல்லி காற்றின் தரம் இந்தியா காற்று மாசுபாடு காற்றின் தரம் Delhi Air Pollution Delhi Air Quality India Air Pollution Air Pollution
Delhi Air Pollution

இன்றைய நவீன காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேபோல், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இவ்வாறு வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகை காற்றில் கலந்து காற்று மாசடைந்துள்ளது.

குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பெரிதும் முயன்று வந்தன.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து வெகுவாக குறைந்ததோடு, அதிக அளவிலான நச்சுப்புகையை வெளியேற்றி வந்த தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இதனால் காற்றின் தரத்தைக் குறைக்கக்கூடிய நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு வெளிப்பாடு குறைந்து காற்றின் தரம் உயர்ந்துள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டின் 39 நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும், 51 நகரங்களில் திருப்தி அளிக்கும் நிலையிலும் உள்ளது என மத்திய மாசுக் கட்டடுபாட்டு வாரியத்தின் தரவுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க:சூற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.6 கோடி அபராதம்!

Last Updated : Mar 30, 2020, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.