வானநிலை, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, வைக்கோல் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த ஒரு மாதமாக மோசமாகி வருகிறது.
இந்நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்ட தரவுகளின் படி, காலை 9 மணி அளவில் டெல்லியில் காற்றுமாசின் தரக்குறியீட்டு அளவு சராசரியாக 334ஆக (மிகவும் மோசமாக) உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் காற்றின் தரம் அபாய நிலையை எட்டியுள்ளது.
இதேபோன்று காற்றில் உள்ள நுண்துகள்கள் PM 2.5, PM 10 ஆகியவற்றின் அளவு முறையே 233, 387ஆக உள்ளது. இந்தச் சூழலை கருத்தில்கொண்டு சுவாசம், இதயக்கோளாறு உள்ள நோயாளிகள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என, சாஃபர் (SAFAR) அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்