டெல்லி: இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 23ஆம் தேதி சிக்கிம் செல்கிறார்.
அங்கு நடக்கும் தசாரா விழாவில் சாஸ்திரா பூஜையில் (ஆயுதப் பூஜை) கலந்துகொள்கிறார். மேலும் அத்தினங்களில் பல்வேறு சாலை வசதி திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
நவராத்திரி விழாவில் சாஸ்திரா பூஜை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜைகள் செய்வார்கள். ஏற்கனவே ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்திருந்தார்.
இது அப்போது இரு வேறு கருத்துகளுக்கு வழிவகுத்தது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே மோதல் ஏப்ரல்-மே மாதங்களில் அதிகரித்தது. இதனால் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பாங்காங் தசோ ஏரியை ஆக்கிரமிக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். அதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி!