ETV Bharat / bharat

பாதுகாப்புப் படைகளைப் பாராட்டிய ராஜ்நாத் சிங்! - பாதுகாப்பு படைகளை பாராட்டிய ராஜ்நாத் சிங்

டெல்லி: தற்போதைய சூழலை பாதுகாப்புப் படை சிறப்பாகக் கையாண்டுவருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
author img

By

Published : Oct 28, 2020, 5:14 PM IST

இந்திய-சீன நாடுகளுக்கிடையே கல்வான் மோதலைத் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. அப்போதிலிருந்தே, பாதுகாப்புப் படைகளைத் தயார் நிலையில் வைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புப் படையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் டெல்லியில் நான்கு நாள் மாநாடு நடைபெற்றுவருகிறது.

இதில், கலந்துகொண்டு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைகளை வெகுவாகப் பாராட்டினார். பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்திய ராணுவத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலை எதிர்கொள்வதில் இந்திய ராணுவம் மகத்தான செயலை செய்துள்ளது" என்றார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நடைபெற்ற ராணுவ கமெண்டர்களின் மாநாட்டில் கலந்துகொண்டேன். தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருதி இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையால் நான் பெருமைகொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.