ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்னல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “ரஃபேல் விமானம் முன்னதாகவே கிடைத்திருந்தால், பாகிஸ்தான் செல்லாமல் பாலகோட் தாக்குதலை நடத்தியிருக்கலாம். இந்தியாவில் அமர்ந்துகொண்டு அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழித்திருக்கலாம். ரஃபேல் விமானத்தில் ஓம் என்று எழுதி, அதில் ரக்ஷா பந்தன் கயிரைக் கட்டினேன். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ரஃபேல் விமானம் இங்கு வருவதை காங்கிரஸ் வரவேற்று இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் விமர்சித்திருப்பது பாகிஸ்தானை பலப்படுத்தும்” என்றார்.