ரஃபேல் விவகாரத்தில் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருடன் என்று விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மக்களவை உறுப்பினர் மீனாட்சி லேக்கி தொடர்ந்த வழக்கில் ராகுலிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஃபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதுகுறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தொடுத்துள்ள வழக்கில், 'உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பிரதமரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், ராகுல் மக்களிடையே பிரதமருக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்' என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ராகுலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது