மாற்றுக்கருத்து என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். எதிர்கட்சி தலைவர் என்ற தனிப் பொறுப்பை இந்திய அரசியல் சாசனம் தனியே உருவாக்கியுள்ளது. ஆனால் முன்தைய பிரிடிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அவதூறு சட்டத்தை, தற்போதைய ஆட்சியாளர்கள் ஊடகங்களை முடக்கும் கருவியாகப் பயன்படுத்திவருகின்றன.
தன்னை எதிர்போருக்கு எதிராக பழிவாங்கும் அரசியலுக்கு பெயர் பெற்றவர் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா. அவதூறு வழக்குகளுடன், தனது தவறுகளை சுட்டிக்காட்டு நாளிதழ்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டவர் ஜெயலலிதா. 2011-2013 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், தி இந்து, நக்கீரன், தி டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், தமிழ் முரசு, முரசொலி, தினகரன் போன்ற ஊடகங்களுக்கு எதிராக தமிழக அரசு 25க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளது.
சென்னையில் காலரா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் ஆளும் அரசின் அலட்சியமான செயல்பாட்டுக்கு எதிராக திமுகவின் ஆர்ப்பாட்டங்களை விரிவாகப் பதிவுசெய்த காரணத்திற்காக நக்கீரன் அலுவலகத்தை அதிமுகவினர் தாக்கினர்.
அரசு ஊழியர்களும் அரசியலமைப்பின் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவதூறு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற நீதிபதி அப்துலின் தீர்ப்பு தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பொதுமக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்களே. எனவே, விமர்சனங்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். குடிமக்களின் விமர்சனத்தில் அரசு பொறுப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை பாராட்டத்தக்கது.
மேலும் கிரிமினல் அவதூறு வழக்குகளை கையாள்வதில் மாநில அரசுகள் அதிக கட்டுப்பாட்டுடன், முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தொடர்ச்சியாகப் பரிந்துரைத்தார். சமூக ஊடகங்களின் அதிகமாகியுள்ள இந்தகாலக் கட்டத்தில் இந்த விவகாரம் நீதித்துறைக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி அப்துலின் தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சம் பல கேள்விகளை எழுப்புகிறது. பிரிவு 199 (2) இன் கீழ், பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதை நீதிபதி சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தபோதிலும், நிலைமை தற்போதுவரை மாறவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் கே.கே.மிஸ்ரா, சிவராஜ் சிங் சவுகானின் (மத்திய பிரதேச முதல்வர்) மனைவியின் உறவினர்களுக்கு முக்கியமான அரசாங்க பதவிகள் வழங்கப்பட்டதாகவும், வியாபம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உள்ளூர் பாஜக அரசு தொடர்பு கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதன் விளைவாக, அவதூறு வழக்கில் மிஸ்ராவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குகளை சுயமான முறையில் மதிப்பீடு செய்ய அரசு வழக்கறிஞர் தவறியதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
தேவைப்பட்டால் தனிப்பட்டவிதத்தில் வழக்குகளை பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சௌஹானையும் அவரது மனைவியையும் கேட்டுக் கொண்டார், மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவதூறு சட்டத்தைப் பயன்படுத்துவதை அரவிந்த் கெஜிரிவால் எதிர்த்தார். மேலும், அரசை விமர்சித்ததற்காக நான்கு அவதூறு வழக்குகளை எதிர்கொண்டார் கெஜ்ரிவால்.
ஆனால், அதே கெஜ்ரிவால் தனது அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார். உண்மையில், உச்ச நீதிமன்றமே அவரது இரட்டைத் தன்மையை கண்டித்தது. அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை போன்ற பல நாடுகள் தங்கள் அரசியலமைப்பிலிருந்து குற்றவியல் அவதூறு சட்டங்களை ரத்து செய்துள்ளன. அவசர காலங்களில் அதை தக்க வைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்தது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொண்டு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க, தற்போதுள்ள அவதூறுச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் அவசியம்.