ETV Bharat / bharat

தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்! - போதைப்பொருளும் பாலிவுட் திரையுலகமும்

மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.

தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்!

author img

By

Published : Oct 28, 2020, 1:07 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பான வழக்கில் போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக என்.சி.பி. மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில, நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட 23 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரீஷ்மா பிரகாஷின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அலுவலர்கள் கடந்த மாதம் திடீர் சோதனையிட்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து ஏறத்தாழ 1.8 கிராம் எடையுள்ள ஹஷிஷ் (போதைப்பொருள் வகைகளுள் ஒன்று) கண்டெடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஆகியோரை என்.சி.பி. இணைத்தது.

தீபிகா படுகோனே உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களிடம் கடந்த மாதம் என்.சி.பி. அலுவலர்கள் பல்வேறு கட்டமாக விசாரணை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.