கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத வழிபாட்டு தளங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திறக்கப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கோயில் தலைமை போதகர் உள்ளிட்ட 28 பேர் கலந்துகொண்டனர்.
இது குறித்து கோயிலின் போதகர் பூவான் சந்திர உனியால் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தங்களிடம் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இன்று கோயில் திறக்கப்பட்டவுடன் அவரின் பிரார்த்தனையே முதலில் மேற்கொள்ளப்பட்டது.
கோயில் திறக்கப்பட்டதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், கரோனா வைரஸ் தொற்றுநோய் அழிக்கப்பட சர்தாம் யாத்திரை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஜோஷிமத், அனில் சானியல், "பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்றும், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏப்ரல் 29 அன்று, ஆறு மாத கால குளிர்கால இடைவெளிக்குப் பிறகு கேதார்நாத் கோயில் கடந்த எப்ரல் 29ஆம் தேதி திறக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஊரடங்கின் காரணமாக யாத்ரீகர்கள் சன்னதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
இதையும் பார்க்க: கரோனா: இந்தியாவுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கும் உலக வங்கி