ETV Bharat / bharat

ஜெகன் மோகன் ரெட்டிக்கு சந்திர பாபு எழுதிய கடிதம்!

ஹைதராபாத்: பிரஜா வேதிகா பகுதியை எதிர்க்கட்சி தலைவரின் குடியிருப்பாக அறிவிக்கக்கோரி சந்திர பாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி
author img

By

Published : Jun 5, 2019, 5:46 PM IST

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றுபெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்கட்சி தலைவராக சந்திர பாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வசிக்கும் பிரஜா வேதிகா பகுதியை எதிர்க்கட்சி தலைவரின் குடியிருப்பாக அறிவிக்கக்கோரி சந்திர பாபு நாயுடு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "சட்டப்பேரவை உறுப்பினர்களையும், பார்வையாளர்களையும் சந்திக்க ஏதுவாக பிரஜா வேதிகா பகுதியை எதிர்க்கட்சி தலைவரின் குடியிருப்பாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளையும், மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் 22 தொகுதிகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைபற்றியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.