இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் கோன்டியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீமா-கோரேகான் வழக்கு தொடர்பான விசாரணையை மாநில அரசின் (மகாராஷ்டிரா) அனுமதியின்றி, தேசிய விசாரணை நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திருப்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து பேசிய அனில் தேஷ்முக், மகாராஷ்டிரா முதலமைச்சராக சரத்பவார் பல ஆண்டுகள் சேவையாற்றியதாகவும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை திருப்பப் பெறும் முடிவு பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.