புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக 6 மாத காலம் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் சில தளர்வுகளுடன் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்தது.
ஆனால் கரோனா காலத்தில் இயக்கப்படாத பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட சாலை வரியை ரத்து செய்யக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, இன்று (அக்டோபர் 22) முதல் தனியார் பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர் சங்கத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில், இரண்டு கால் ஆண்டிற்கான சாலை வரியைத் தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
புதுச்சேரி: சாலை வரி குறித்தான பேச்சுவார்த்தையில் அரசுடன் உடன்பாடு ஏற்படவே, தனியார் பேருந்துகளை இயக்க உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.