ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும். அதிக டென்ஷன், பதற்றம் போன்ற பிரச்னைகளால் இது ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்தத் தலை வலி ஏற்படும்பொழுது தலை வலியோடு சேர்ந்து ஒற்றைக் கண்ணும் வலிக்கும். இது பலருக்கும் மிகப்பெரிய பிரச்னையை உண்டாக்குகிறது.
தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த ஒற்றைத் தலை வலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஒற்றைத் தலைவலி மேலும் பலவித வியாதிகளுக்கும் வழிவகுக்கும் என நம்புகிறார்கள்.
இந்த ஒற்றைத் தலைவலியினால் தலைச்சுற்று, வாந்தி போன்ற பிரச்னைகளும் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஒற்றைத் தலைவலி உடனடியாக சரி செய்வதற்கு கடைகளில் தலை வலி மாத்திரைகள் கிடைக்கின்றன. அதை உபயோகித்து வருகின்றனர் பலரும். ஆனால், அந்த தலை வலி மாத்திரைகளின் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.
தலை வலி மாத்திரைகள், வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை நாம் தினமும் எடுத்து வந்தால் கிட்னி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, வலி நிவாரணி, தலைவலி மாத்திரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இது போன்ற பிரச்னைகளை இயற்கையாக விரட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிலும் இந்த தலை வலி பிரச்னையை இயற்கையாகவே வீட்டிலிருந்தே விரட்டிவிடலாம்.
ஒற்றைத் தலை வலியை சரி செய்ய சில டிப்ஸ்:
1 . நல்ல உறக்கம்: ஒரு இருட்டு அறையில் 7 மணி முதல் 9 மணி நேரம் உறங்கினால், இந்த தலை வலி சரியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
2 . இஞ்சி டீ: இஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், இந்த இஞ்சி டீ-யைப் பருகினால் விரைவில் இந்த தலை வலிக்குத் தீர்வு காணலாம்.
3 .தண்ணீர் அருந்துதல்: நிறைய தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பம் தணிந்து அனைத்து உறுப்புகளும் சீராகச் செயல்படும். எனவே, தலைவலி ஏற்படும்போது அதிகமாக தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் சாக்லேட், ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்தல் தலை வலிக்கு விரைவில் தீர்வு காணலாம்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!