கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால், வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய 12 நாடுகளில் சிக்கியுள்ள 15 ஆயிரம் இந்தியர்களை அழைத்துவர மே 7 முதல் 13ஆம் தேதி வரை 64 சிறப்பு விமானங்களை இயக்கப்போவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விமானங்கள் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள பலரும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்திற்குச் சென்றுள்ளனர்.
ஒரே நேரத்தில் பலர் தளத்திற்கு வந்ததால், அது தற்போது முடங்கியுள்ளது. இதனை அந்த அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. "எதிர்பாராத வகையில் அதிக நபர்கள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தளத்திற்கு வந்ததால், அந்த இணையதளம் முடங்கியுள்ளது.
-
The MoCA website is down due to unprecedented traffic. Team NIC is working on it. Details regarding evacuation flights will be put up on the Air India website soon. Kindly check there directly. Our apologies for the inconvenience caused.
— MoCA_GoI (@MoCA_GoI) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The MoCA website is down due to unprecedented traffic. Team NIC is working on it. Details regarding evacuation flights will be put up on the Air India website soon. Kindly check there directly. Our apologies for the inconvenience caused.
— MoCA_GoI (@MoCA_GoI) May 6, 2020The MoCA website is down due to unprecedented traffic. Team NIC is working on it. Details regarding evacuation flights will be put up on the Air India website soon. Kindly check there directly. Our apologies for the inconvenience caused.
— MoCA_GoI (@MoCA_GoI) May 6, 2020
இணையத்தை மீட்கும் முயற்சியில் என்.ஐ.சி. (தேசிய தகவல் மையம்) ஈடுபட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் குறித்த விவரங்கள் விரைவில் ஏர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படும். விமானங்கள் குறித்த தகவல்களை ஏர் இந்தியா தளத்திலேயே பார்த்துக்கொள்ளலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்" என்று பதிவிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமான் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அழைத்துவர 64 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!