குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நாட்டின் சுகாதாரம் குறித்தும், கோவிட்-19 பெருந்தொற்று குறித்தும் முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”மருந்துகள் மற்றும் தடுப்பூசிக்கு நாம் தயாராகிவிட்டாலும் கவனத்தை எப்போதும் கைவிடக்கூடாது.
தடுப்பூசி பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படும். ஒரு சில சுயநலவாதிகள் தங்கள் லாபத்திற்காக தடுப்பூசி குறித்து பொய் தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பிவருகின்றனர்.
மக்கள் இதை நம்பாமல் உண்மை செய்திகளுக்கு மட்டுமே செவி கொடுக்க வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில் 10 புதிய எய்ம்எஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 20 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஆதரவளித்த கேரள பாஜக எம்.எல்.ஏ!