கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறி துணை நிலை ஆளுநரிடம் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு கடிதம் அளித்தார். இதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் கொறடா கே.ஆர்.ஆனந்தராமன், எம்எல்ஏ தனவேலுவை பதவி நீக்கம் செய்யக்கோரி கடிதம் அளித்தார்.
இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவின் பாப்ஸ்கோ வாரியத்தின் தலைவர் பதவியை அரசு பறித்துள்ளது. இவருக்கு பதிலாக குடிமைப்பொருள் வழங்கல் தலைவர் ஆலிஸ் வாஸ் அந்த பதவியை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனவேலுவின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க கோரி அரசு கொறடா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது வருகிற திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

காங்., எம்.எல்.ஏ-வை தகுதிநீக்கம் செய்ய காங்., எம்.எல்.ஏக்கள் போர்கொடி!