ETV Bharat / bharat

பூப்பறித்த விவகாரம்: 40 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கொடுமை!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் 40 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த தீண்டாமைக் கொடுமை அரங்கேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூப்பறித்த காரணத்திற்காக 40 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கொடுமை !

author img

By

Published : Aug 25, 2020, 8:24 PM IST

ஒடிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தை அடுத்துள்ள கண்டியோ கட்டேனி கிராமத்தில், ஏறத்தாழ 40 தலித் குடும்பங்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அக்கிராமத்தில் உள்ள உயர் சாதியைச் சேர்ந்த பண்ணையாரின் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சூரியகாந்தி பூக்களை தலித் சிறுமி ஒருவர் பறித்ததாக அறிய முடிகிறது.

இதுதொடர்பாக கூடிய ஊர் சபைக் கூட்டம் உயர் சாதியினரின் தோட்டத்தில் சிறுமி பூப்பறித்தற்குத் தண்டனையாக 40 தலித் குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பஞ்சாயத்தாரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டும் உயர் சாதிவெறியர்கள் சமூக புறக்கணிப்பு தண்டனையைத் திரும்பப் பெறவில்லை.

கண்டியோ கட்டேனி கிராமத்தில் நடைபெறும் வழிப்பாட்டு சடங்குகளில் பங்கேற்க தடை, பொது இடத்தில் நடக்க அனுமதி மறுப்பு, வேறு சமூகத்தினருடன் பேச தடை, ரேசன் பொருள்கள் உள்ளிட்ட அரசு சலுகைகள் பெற தடை, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை பணி இடமாற நிர்பந்திப்பது என தொடர்ந்து தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பொறுமையிழந்த தலித் சமூக மக்கள் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரும் கிராம நிர்வாக உயர் அலுவலர்களும் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தோட்டத்தில் பூப்பறித்த காரணத்திற்காக, தலித் சமூக மக்களையே ஊரை விட்டு சமூக நீக்கம் செய்த கொடுமை நாடு முழுவதும் நிலவும் சாதிய கொடுமைகளை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளதாக தலித் சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.