வங்கக் கடலில் அந்தமான் தீவு அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் காணப்பட்டது. பின் வலுவான புயலாக மாறியது.
இதற்கு ’புல்புல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'புல்புல்' புயல் நேற்று வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் மத்திய வங்கக் கடல் பகுதியில், பலத்த சூறைக் காற்று வீசக்கூடும். மணிக்கு 85 முதல் 105 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 'புல்புல்' தீவிரப் புயலாக வலுவடையும். இந்தப் புயலால் ஒடிசா மாநிலத்துக்குப் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
'புல் புல்' புயல் எதிரொலி: ஒடிசா, மே.வங்க மாநிலத்துக்கு கனமழை எச்சரிக்கை