இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் 750 கிலோ மீட்டர் தெற்கில் புல் புல் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் இரண்டு நாள்கள் கனமழை பெய்யக் கூடும். மேலும் வானமும் வழக்கத்துக்கு மாறாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்தப் புயலானது வருகிற 9ஆம் தேதி கரையைக் கடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புயலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக 120-130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே. சர்மா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பி.கே. சர்மா, “புயல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: புல் புல் புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்லாத 10ஆயிரம் மீனவர்கள்'