ETV Bharat / bharat

தெலங்கானாவில் ஓஎல்எக்ஸ் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த 5 பேர் கைது! - ஓஎல்எக்ஸ் மோசடி கும்பல் தெலங்கானாவில் கைது

தெலங்கானாவில் அரங்கேறிய 40க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடியில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலை சைபராபாத் காவல் துறையினர் கைது செய்தனர்.

lx
lx
author img

By

Published : Sep 30, 2020, 9:13 PM IST

ஹைதராபாத்: தெலங்கானாவில் அரங்கேறிய 40க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடியில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலை சைபராபாத் காவல் துறையினர் கைது செய்தனர்.

தெலங்கானாவில் ஓஎல்எக்ஸ் மூலம் அதிகளவில் பண மோசடி நடைபெறுவதாக, காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சுமார் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, சைபர் கிரைமின் தனிப்படை ஒன்று, களத்தில் இறங்கின. கிட்டத்தட்ட 30 நாள்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் பலனாக ஆன்லைனில் மோசடி ஆட்டத்தை நடத்தி வந்த ராஜஸ்தானில் பரத்பூரை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 லட்சம் ரூபாய் பணம், 21 சிம் கார்டுகள் மற்றும் 12 ஏடிஎம் கார்டுகளை சைபராபாத் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிடைத்த தகவலின்படி, ருக்மின் என்பவர் இந்த மோசடி கும்பலிற்குத் தலைமை தாங்கினார். இவர்கள் போலி இ-வாலட் கணக்குகள், வங்கிக் கணக்குகளைத் திறந்து வாடிக்கையாளர்களுக்குப் பணம் செலுத்தும் கோரிக்கையின் க்-யூஆர் குறியீடுகளை அனுப்புகிறார்கள்.

ஆசை வார்த்தையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பொருள்கள் வீட்டிற்கே வந்துவிடும் என்ற ஆசையில் பணத்தை பறிக்கொடுக்கின்றனர். மக்கள் ஓஎல்எக்ஸ் போன்ற ஆன்லைன் வலைதளங்கள் வழியாக பொருள்களை வாங்கும் பட்சத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையான நம்பிக்கை வந்தபிறகு தான் ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.